எல்லா புனைவுகளும் இருப்பியற் பிரச்சனைகளை, அவற்றினூடாக மனிதச் சுயத்தைப் புரிந்துகொள்ளும் நிறைவேறாத முயற்சிகள்தான். இருப்பியற் பிரச்சனைகளை வரலாறுதான் தீர்மானிக்கிறது.
வெலிக்கடை சிறைப்பபடு கொலை, மட்டக்களப்பைச் சிறை உடைப்பு, இயக்க படுகொலைகள் என்கிற வரலாற்றுப் பின்னணியில் மனித இருப்பைப் புரிந்துகொள்ள முயலும் சிக்கலான பணியை வேகம் குன்றாமல் செய்கிறது ஷோபாசக்தியின் இப்புதினம்.